search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி ஆறு"

    • க.பரமத்தி அருகே உள்ள கார் வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு இன்று காலை 6.00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை.
    • 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 15.94 அடியாக இருந்ததால் நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    கரூர்:

    தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மே 24-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 3,000 கனஅடி முதல் அதிகபட்சமாக 1.20 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக குறைக்கப்பட்டது.

    இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு கூடுதல் தண்ணீர் வருவதால் 1.75 லட்சம் கன அடி தண்ணீர் நேற்று காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. இன்று காலை அது 2 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும் பவானி சாகர், அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரும் காவிரி ஆற்றில் சேர்ந்து மாயனூர் கதவணைக்கு வந்து சேர்கிறது.

    இதனால் இன்று காலை 6.00 மணி நிலவரப்படி மாயனூர் கதவனைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 39 ஆயிரத்திற்கு 256 கனஅடி தண்ணீர் வந்தது. டெல்டா பாசன பகுதிக்கு குறுவை சாகுபடிக்காக காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 256 கன அடி தண்ணீரும், நான்கு கிளை வாய்க்கால்களில் 1,120 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் வடகாடு மலைப்பகுதியில் மழை இல்லாததால் நங்காஞ்சி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது 33.86 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே உள்ள கார் வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு இன்று காலை 6.00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 15.94 அடியாக இருந்ததால் நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    • காவிரி ஆறு தமிழக மக்களின் தாகத்தை தீர்த்து, உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமையப்பெற்றது மேட்டூர் அணை.
    • கொள்ளிடத்தில் திறக்கப்படும் தண்ணீர் வீணாக கடலில் கலக்க கூடும்.

    காவிரி பாசனப்பகுதி விவசாயிகளின் நம்பிக்கையாக திகழ்வது மேட்டூர் அணை. கர்நாடக மாநில குடகு பகுதியில் தொடங்கும் காவிரி ஆறு தமிழக மக்களின் தாகத்தை தீர்த்து, உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமையப்பெற்றது மேட்டூர் அணை.

    மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களை வளப்படுத்தி தமிழக மக்களின் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள மக்களின் அரிசி தேவையை பூர்த்தி செய்ய வழிவகுக்கும் ஒரு அணை யாக அமைந்து ள்ளது.

    வழக்க மாக காவேரி டெல்டா பாசன பகுதிக்கு ஜூன் 12 தண்ணீர் திறந்து விடப்படும்.இந்த ஆண்டு மேட்டூர் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் முன் எப்போதும் இல்லாத வகையில் மே மாதம் 24 ஆம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது முன்னதாக தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் முழு மூச்சாக குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் பருவ மழை தொடங்குவதற்குள் குறுவை அறுவடை செய்வதற்கு ஏதுவாக பணிகளை முடுக்கிவிட்டு செய்து கொண்டுள்ளனர்.இதற்கிடையே மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அளவு கடந்த சில நாட்களாக வெகுவாக அதிகரித்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையில் நீர்மட்டம் 109 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது.

    மேலும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்தால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டால் திறக்கப்படும் தண்ணீர் அப்படியே கொள்ளிடத்தில் திருப்பி விடக் கூடிய வாய்ப்பு உள்ளது. கொள்ளிடத்தில் திறக்கப்படும் தண்ணீர் வீணாக கடலில் கலக்க கூடும்.மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் திருச்சி, தஞ்சை மாவட்டங்களை பயன்பெறும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால, மற்றும் உயர் கொண்டான் நீட்டிப்பு, புள்ளம்பாடி கா ல்வா ய்களில் தண்ணீர் திறக்கப்பட்டு அதனோடு இணைந்த ஏரிகளை நிரப்ப நடவடி க்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    தற்பொழுது டெல்டா மாவட்டங்களில் பருவநிலை சீராக இருக்கும் நிலையில் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மற்றும் உய்யக்கொண்டா–ன்நீட்டிப்பு வாய்களில் தண்ணீர் திறந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீராக செயல்பட்டால் இந்த பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஏரிகளை நிரப்பி தண்ணீரை சேமிக்க வழி ஏற்படும்.எனவே பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறையினர் விரைவாக செயல்பட்டு மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக திறக்கப்படும் தண்ணீரை வீணாக்காமல் ஏரிகளை நிரப்ப ஆவனசெய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    • கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.
    • கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது.

    சேலம்:

    கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் 2 அணைகளில் இருந்தும் 17 ஆயிரத்து 481 கன அடி உபரி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி இன்று கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 25 ஆயிரம் கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து விநாடிக்கு 7500 கன அடி தண்ணீரும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் விரைவில் ஒகேனக்கல்லுக்கு வந்து சேரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    கபிஸ்தலம் பாலக்கரை அருகே காவிரியாற்றில் மூழ்கி இறந்த 6 மாணவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் துரைக்கண்ணு ஆறுதல் கூறினார்.

    கபிஸ்தலம்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் காவிரியாற்றில் கடந்த 19-ந்தேதி நீரில் மூழ்கி இறந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் துரைக்கண்ணு, கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் ஆறுதல் கூறினர்.

    கபிஸ்தலம் கிராமம், சீதா லெட்சுமிபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 17), வெங்கடேஷ் (18), விஷ்ணுபிரசாத் (13), ஸ்ரீநவீன் (14), கதிரவன் (18), சிவபாலன் (15) ஆகிய 6 மாணவர்கள் கபிஸ்தலம் பாலக்கரை அருகே காவிரியாற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி இறந்தனர். தகவலறிந்த அமைச்சர் துரைக்கண்ணு இறந்த மாணவர்களின் இல்லத்திற்கு சென்று பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். முதலமைச்சர் நிவாரண நிதி உதவித்தொகை கிடைக்கப் பெறுவதற்கு கலெக்டர் மூலமாக பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் பாரதிமோகன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. ராம்குமார், பாபநாசம் தாசில்தார் மாணிக்கராஜ், முன்னாள் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர்மோகன், முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் கோபிநாதன், சூரியநாராயணன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கர்நாடகாவில் காவிரி நீர் உற்பத்தியாகும் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியது.
    பெங்களூர்:

    கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தில் பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குடகு மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்துவருகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினமும் மாவட்டம் முழுவதும் பலத்த மழை கொட்டியது. குறிப்பாக காவிரி ஆறு உற்பத்தியாகும் தலைக்காவிரி, பாகமண்டலா பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை விடிய, விடிய மழை கொட்டித்தீர்த்தது.

    குடகு மாவட்டத்தில் 2 நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டிவருவதால், நேற்று மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    தலைக்காவிரி பகுதியில் பெய்த பலத்த மழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோரத்தில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் முக்கிய அணையான கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துவருகிறது. ஹாரங்கி அணைக்கும் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,859 அடி உயரம் கொண்ட இந்த அணையில் தற்போது 2,788.18 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 295 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது.

    குடகு மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 64.40 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மடிகேரியில் 108.80 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. பல இடங்களில் பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறார்கள்.

    கனமழையால் குமாரதாரா, நேத்ராவதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் 2 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.

    கர்நாடக கடலோர மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும், மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    ×